தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஆளும் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் சரத்குமார் மற்றும் கட்சிக்குள் தொடர் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகிய மூவரின் அமைச்சர் பதவிகளும் பறிக்கப்படலாம் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய அமைச்சரவை மாற்றத்தை முறைப்படி அறிவிப்பதற்காகவே சபாநாயகர் ஆளுநரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. தவறு செய்தவர்கள் மீது சமரசம் இன்றி நடவடிக்கை எடுக்கும் முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி ஆக்ஷன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் பாணியை நினைவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
