திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், வெறும் ஆசைக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், உண்மையாக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் வரும்போது மட்டுமே அரசியலில் கால் பதிப்பேன் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், ஆரம்பகாலத்தில் இருந்து முதலமைச்சர் விஜய்யின் திரைப்படங்களுக்காக போஸ்டர் ஒட்டியவர்கள், நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்தவர்கள், கட்சி தொடங்கிய பிறகு அவருக்காக இரவு பகலாகப் பாடுபட்டவர்கள் ஆகியோருக்கே தவெகவில் போட்டியிடுவதற்கான முன்னுரிமையும் தகுதியும் உள்ளது என்றும், அவர்களே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் லாரன்ஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
