மத்திய அரசு செய்ய முடியாததை நான் செய்துவிட்டேன் என இபிஎஸ்-க்கு வயிற்றெரிச்சல்.. முதல்வர் ஸ்டாலின் தாக்கு..!

Spread the love

பல்லாவரத்தில் நடைபெற்ற  அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியும் மருத்துவமும் தான் நமது திமுக அரசின் இரு கண்களாக உள்ளன. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கான, கல்விக் கொள்கையை நேற்று வெளியிட்டேன். காலுக்கு கீழ் சிறிது நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்னும் பலருக்கு கனவாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியில் மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மனிதனின் அடிப்படையான தேவை உடை, உணவு. இவை எளிதில் கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைப்பதில்லை. பட்டா வழங்குவதில் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், 5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு ரூ. 1,672 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியுள்ளோம். கலைஞர் ஆட்சிக்குப் பின் தற்போது இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி, அடிப்படை தெரியாத அறிவிலி போல், மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார். மத்திய அரசு செய்ய முடியாத நல்திட்டங்களை, மு.க.ஸ்டாலின் செய்கிறார் என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறார். இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து, இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம். ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை ,இருப்பிடம் தான் என்பதை கருத்தில் கொண்டு, இத்திட்டம் செயல்பட்டு வருகிறது என்று பேசிவிட்டு, பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Srimathi

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

4 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

5 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

5 மணத்தியாலங்கள் ago