‘அரியணையில உட்கார வச்சாங்க…. என் வாழ்க்கையோட பில்லரே இவங்கதான்’…. சட்டமன்றத்தில் நெகிழ்ந்து பேசிய முதல்வர் விஜய்…!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் பூவே உனக்காக படம் வெளியான காலத்தில் இருந்தே, தமிழ்நாட்டுப் பெண்களின் மனதில் அவருக்கு ஒரு தனி இடம் உருவானது. தொடர்ச்சியாக அவர் நடித்த காதல் திரைப்படங்கள் பெண்களுக்கு அவரைப் பிடித்தமான நடிகராக மாற்றிய நிலையில், காலப்போக்கில் தமிழகப் பெண்கள் அவரைத் தங்கள் வீட்டு மகனாகவும், உடன் பிறந்த சகோதரனாகவும் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த மாறாத அன்பும் நம்பிக்கையும்தான், அரசியலில் அவர் கால் பதித்த பிறகு ‘தமிழக வெற்றி கழகம்’ சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளையும், மிகப்பெரிய ஆதரவையும் பெறுவதற்குக் மிக முக்கியமான காரணியாக அமைந்தது.

இன்று சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பெண்களின் இந்தத் தொடர் ஆதரவை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார். சட்டமன்றத்தில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள பெண்களுக்காக நான் பேசுகிறேன்; தமிழ்நாட்டில் ஏராளமான பெண் ஆளுமைகள் நிறைந்துள்ளனர். இன்றைக்கு 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறார்கள். அன்றும் சரி, இன்றும் சரி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்திற்கு என்னுடைய பாட்டி, அம்மா, அக்கா மற்றும் தங்கைகளான பெண்கள்தான் மிக முக்கியக் காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” என்று முழங்கினார். பெண்களின் உரிமையையும், தன் வெற்றிக்கு அவர்களே அஸ்திவாரம் என்பதையும் அவர் சட்டமன்றத்தில் பதிவு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.