காக்கரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே, நாட்டின் சிறந்த முதலமைச்சர்களாக மு.க. ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோரைப் பாராட்டியிருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் இளைஞர்களின் பேராதரவோடு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி வேட்பாளர்களின் தாக்கத்தை எதிர்கொள்ள, Gen-Z வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற CJP-யுடன் திமுக கூட்டணி அமைக்க முயல்வதாகக் தகவல்கள் உலா வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் சாராத ஒரு வலுவான 3-வது கூட்டணிக் கட்டமைப்பாக CJP, திமுக, சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கைக்கோர்க்கக் கூடும் என்ற அரசியல் கணக்குகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
