DMK-வா? TVK-வா?…. விஜய் விடுத்த ஆஃபர்.. தூக்கி அடித்த தேமுதிக….. உண்மையைப் உடைத்த பிரேமலதா….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்ததாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், கொண்ட கொள்கையில் என்றும் உறுதியாக இருப்பதால் தேமுதிக தன் நிலப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாராம். மேலும், தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு, சுயநலத்திற்காக வேறு சில கட்சிகள் கூட்டணியை மாற்றிவிட்டதாக மறைமுகமாகச் சாடியுள்ளார்.

தேமுதிக எந்தச் சூழ்நிலையிலும் தனது தர்மத்தையும் கொள்கையையும் அடகு வைக்காது என்று சுட்டிக்காட்டிய பிரேமலதா, சோபா செட், பீரோ, லாக்கர் என எந்தவிதமான சொகுசுப் பொருட்களையோ அல்லது லஞ்சத்தையோ கொடுத்தாலும் தேமுதிக தன் கூட்டணியை மாற்றிக் கொள்ளாது என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் வேளையில், விஜய்யின் அழைப்பு மற்றும் பிரேமலதாவின் இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.