பாட்டு பாட வந்த பின்னணி பாடகியை அஜித்துக்கு ஜோடியாக்கிய இயக்குநர்.. அவரே சொன்ன சுவாரசிய தகவல்..

By Archana on தை 9, 2024

Spread the love

2001-ம் ஆண்டு அஜித், வசுந்தரா தாஸ், நக்மா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிட்டிசன். சரவண சுப்பையா எழுதியது மட்டுமில்லாது இப்படத்தை இயக்கியும் இருந்தார். அஜித்தின் திரைவாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது எனலாம். சுமார் 9 வித்தியாசமான தோற்றங்களில் இரட்டை வேடத்தில் இப்படத்தில் அஜித் நடித்திருந்தார்.

#image_title

நடிகர் சரவண சுப்பையா சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான படம் சிட்டிசன். அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் அந்த காசுக்கு ஆசைப்பட்டு, அரசு அதிகாரிகள் மூன்று பேர் இணைந்து ஒரு கிராமத்தையே அழித்த கதை தான் சிட்டிசன். இதில் தப்பித்த சிறுவன் பெரியவனாகி தனது கிராமத்தை அழித்தவர்களை பழி தீர்ப்பது தான் மீதிக் கதை. இப்படத்தில் வசுந்தரா தாஸின் அழகு இளைஞர்களை கவர்ந்தது. குறிப்பாக பூக்காரா, ஐ லைக் யூ பாடல்களில் வசுந்தராவின் மேக்கப் பெண்களிடம் பரவலாக பேசப்பட்டது.

   
   

#image_title

 

வசுந்தரா தாஸ், ஒரு திரைப்பட பின்னணி பாடகி ஆவார். பிறகு கமல்ஹாசனின் ஹேராம் மற்றும் சிட்டிசன் படங்களின் மூலம் நாயகியாகவும் அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். முதல்வன் படத்தில் இவர் குரலில் உருவான சகலக்க பேபி பாடல் இன்றும் இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பெறும். இந்த நிலையில் சிட்டிசன் படத்தில் முதலில் நடித்தது சமீரா ரெட்டி தானாம். அவரை வைத்து சில சீன்களையும் படமாக்கியுள்ளனர்.

#image_title

ஆனால் சமீராவுக்கு தமிழ் தெரியாததாலும், இயக்குநருக்கு ஹிந்தி தெரியாததாலும், அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு இப்படத்தில் பூக்காரா பாட்டை பாட வைப்பதற்காக வசுந்தரா தாஸை அணுகியுள்ளனர் படக்குழு. அவரைப் பார்த்ததும் இயக்குநர் இவர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி, பிறகு அவரிடம் கதை கூறி ஓகே வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு டான்ஸ் ஆடத் தெரியாது, ஆனாலும் இப்படத்திற்காக அவர் கஷ்டப்பட்டு நடனமாடியதாக இயக்குநர் ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார். சிட்டிசன் படத்தில் ஐ லைக் யூ மற்றும் பூக்காரா ஆகிய பாடல்களையும் வசுந்தரா தாஸ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title