Real ஜோடியாகப்போகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழில்- அமிர்தா…? அவர்களே வெளியிட்ட வீடியோ… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்…

By Begam

Updated on:

விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாக தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை தற்போது பார்க்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

   

பல்வேறு கதை களங்களுக்கு மத்தியில் தற்பொழுது செழியன் -ஜெனி பிரிந்து வாழ்ந்து வருகின்றன.ர் இன்னொரு பக்கம் கணேஷ், எழில் -அமிர்தா வாழ்க்கையில் குறுக்கே வந்துள்ளார். கணேஷ் அமிர்தாவின் முதல் கணவர். இந்த சீரியலில் கணேஷ் இறந்ததாக நினைத்து எழிலை  திருமணம் செய்தார் அமிர்தா.

தற்பொழுது கணேஷ் உயிருடன் வந்து, எழிலிடம் அமிர்தா  என் பொண்டாட்டி. என் கூட தான் வாழனும். நிலா என் குழந்தை .என் கூட தான் இருக்கணும்னு சண்டை இழுத்துக்கொண்டுள்ளார். ஆனால் அமிர்தா எழிலுடன் சேர்ந்து வாழவே முடிவெடுத்துள்ளார்.  இதை தொடர்ந்து எழிலுக்கு  ஆதரவாக மொத்த குடும்பமும் தற்பொழுது நிற்கிறது. தற்பொழுது செழியன் – ஜெனி ஒன்று சேர்வார்களா? எழில் – அமிர்தா  பிரச்சினை எப்படி முடிய போகிறது? என ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில்  எழில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் மற்றும் அக்ஷிதா இருவரும் உண்மையாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  விஜே விஷால் தனது இன்ஸ்டா  பக்கத்தில் அக்ஷிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார், இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள்  ‘நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?’ என்று கேள்வி எழுப்பி , வாழ்த்தும் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…