கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வடிவேலுவின் மகள்.. விஜயகாந்த் மீது தீராத கோபத்துக்கு இது தான் காரணமா?

By Sumathi

Updated on:

நடிகர் விஜயகாந்த், வடிவேலு மோதல் கடந்த 2010ல் துவங்கியது. படப்பிடிப்பில் டைரக்டர் சொன்ன வசனத்தை மாற்றி பேசினார் வடிவேலு. பலமுறை கேப்டன் சொல்லியும் அதே டயலாக்கை திரும்ப திரும்ப பேசி, படப்பிடிப்பில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த, ஒருகட்டத்தில் வடிவேலுவை ஓங்கி அறைந்திருக்கிறார் கேப்டன். அதுதான் கேப்டன் – வடிவேலு விரிசலுக்கான முதல் காரணம். அடுத்து திமுக ஆதரவாளராக மாறிய வடிவேலு 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து பிரசார மேடைகளில் பேசினார்.

   

ஆனால் அவரை ஒரு பொருட்டாக, எதிரியாக கருதவில்லை கேப்டன். ஒருமுறை சென்னை விமானநிலையத்தில் கேப்டனும், வடிவேலுவும் நேருக்கு நேர் சந்தித்த நிலையில், என்ன வடிவேலு, நல்லா இருக்கியா என கேப்டன் கேட்க, நல்லா இருக்கேனுங்க கேப்டன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புயல் வேகத்தில் தப்பித்து ஓடியிருக்கிறார் வடிவேலு. ஆனால் விஜயகாந்த் மறைவுக்கு 4 வரி இரங்கல் தெரிவித்து, ரசிகர்களிடம் தனது கவுரவத்தை காப்பாற்ற வடிவேலு மறந்துவிட்டதுதான் இதில் கசப்பான உண்மை.

இதுகுறித்த வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறுகையில், பலமுறை கேப்டனை வடிவேலு தரக்குறைவாக விமர்சித்தும் எந்த இடத்திலும் வடிவேலு குறித்து விஜயகாந்த் தவறாக பேசியது இல்லை. ஒருமுறை, கேப்டனை வடிவேலு இழிவாக பேசியதற்காக கேப்டனின் ஆதரவாளர்களான சிலர், வடிவேலு வீட்டுக்குள் கல் எறிந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதில் வடிவேலுவின் மகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது.

அது பார்த்து பதறிப்போய் கதறி அழுதிருக்கிறார் வடிவேலு. அதுபோன்ற சம்பவங்களால் கேப்டன் மீது வடிவேலு தீராத கோபம் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு போதும் அதுபோன்ற ஒரு தவறான செயலலை செய்பவர் அல்ல கேப்டன். அவருக்கு தெரியாமல் தான் அதுபோன்ற சம்பவம் நடந்திருக்கும். அவர் அப்படிபட்டவர் அல்ல, என்று அதில் கூறியிருக்கிறார் அந்தணன்.

maxresdefault 1
author avatar
Sumathi