வெறும் 3 லட்சம் தான் கையில இருந்துச்சு.. பீச் ஓரமா போய் ஹீரோவை தேடிகிட்டு இருந்தோம்.. மைனா படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த ஒளிப்பதிவாளர் சுகுமார்..!

By Nanthini on பங்குனி 20, 2025

Spread the love

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விதார்த், அமலாபால், தம்பி ராமையா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனா. தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததுடன் 58 வது தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் தன்னுடைய அற்புதமான நடிப்பை நடிகர் விதார்த் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று கூறலாம். இந்த நிலையில் மைனா திரைப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ள ஒளிப்பதிவாளர்  சுகுமார், முதலில் மைனா படத்தில் அனன்யா தான் அடிக்க வேண்டி இருந்தது.

மைனா படத்துல நடிக்க வேண்டியது அந்த ஹீரோ...அட இது தெரியாம போச்சே!....

   

அதன் பிறகு தான் அமலாபால் தேர்வானாங்க. பட்ஜெட் கொஞ்சம் கம்மியா இருந்ததுனால பார்த்து பார்த்து ஹீரோயினிய சூஸ் பண்ணனும். அமலாபால் முதலில் வரும் போது மாடர்ன் லுக்கில் வந்தாங்க. நமக்கு வேண்டியது கிராமத்து லுக் தான். அவங்களோட கண்ணு ரொம்ப பெருசா இருந்ததுனால கிராமத்தில் போட்டோ ஷூட் பண்ண அப்ப படத்துக்கு கரெக்ட்டா செட் ஆயிட்டாங்க. படத்துல நடிச்சிட்டு இருக்கும்போது சாமி சாருக்கு கூட போய் வேற படுத்துற நடிச்சதுனால எங்களுக்கு பயங்கர கோபம் வந்துச்சு. அதுக்கப்புறம் ஒரு வழியா படம் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று அவங்களுக்கே அப்போ தெரியாது. அதே மாதிரி படம் எடுக்குறதுக்கு முன்னாடி டைரக்டர் பிரபு சாலமன் சார் கிட்ட வெறும் 3 லட்சம் ரூபாய் தான் பணம் இருந்துச்சு.

   

Mynaa - Hotstar

 

சும்மா ஒரு டேபிள் போட்டு மூன்று சேர் இருக்கும் அதுதான் எங்களுடைய ஆபீஸ் இருந்துச்சு. தினமும் சாப்பிட்டு டிஸ்கஸ் பண்றதுக்கு தான் அந்த பணம் போதுமானதாக இருந்தது. அதுக்கப்புறம் அதே பணத்தை வைத்து படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி ஹீரோவுக்காக கடற்கரை ஓரமா யாராவது சிக்கு வாங்கலாம்னு தேடிக்கிட்டு இருந்தோம். பிறகுதான் சிறுசிறு கேரக்டரின் நடித்த விதார்த் இந்த படத்தில் ஹீரோவா நடிச்சா நல்லா இருக்கும் என்று பிரபு சாலமன் சார் கிட்ட நானும் ஜான் மாக்ஸும் தெரிவித்தோம். படம் மட்டும் நல்லா வரலைன்னா நான் உங்கள தான் போட்டு அடிப்பேன் என்று பிரபு சாலமன் சார் எங்களை திட்டுவாரு. இருக்கிற பணத்தை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க ஆரம்பிச்சோம்.

வில்லனாக அறிமுகமாகும் விஜய் பட ஒளிப்பதிவாளர் | nakkheeran

படத்துல பஸ் காட்சி முடிந்ததுக்கப்புறம் தான் எங்களுக்கே ஒரு நம்பிக்கை வந்துச்சு. ஒரு வழியா படத்தை எடுத்து முடிச்சிட்டு ரிலீஸ் செய்வதற்கு ரெட் ஜெயன்ட் கிட்ட போட்டு காட்டினோம். அதன் பிறகு நான், இமான் சார், ஜான் மேக்ஸ் உள்ளிட்டோர் படம் எடுத்ததற்கு அப்புறம் 65 ரிகர்சல் நடந்துச்சு. தினமும் தியேட்டருக்கு போய் போட்டு காட்டுவோம். பாக்குறவங்க எல்லாரும் அழுதுட்டு கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துட்டு தான் போவாங்க. ஒருவழியா ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் படத்தை வெளியிட்டாங்க. மைனா படத்தை பொருத்தவரைக்கும் எங்களுக்கு பணம் மட்டும் தான் பிரச்சனையா இருந்ததே தவிர மத்தபடி வேற எதுவுமே இல்லை என்று ஒளிப்பதிவாளர் சுகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.