சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.
அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத சீரியல்களும் முடிக்கப்பட்டு வருகின்றன. சன் தொலைக்காட்சியில் கயல், சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் மற்றும் எதிர்நீச்சல் டு என நிறைய தொடர்கள் பரபரப்பின் உச்சமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் டிஆர்பி யில் இந்த தொலைக்காட்சி தொடர்கள்தான் மாஸ் காட்டி வருகின்றன.
புத்தம் புது தொடர்கள் நிறைய களம் இறங்கி வர தற்போது சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இளம் இளைஞர்கள் நடிக்க ஒளிபரப்பான ரஞ்சனி தொடரை சன் தொலைக்காட்சி முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்போதுதானே தொடங்கப்பட்டது அதற்குள் முடிவடைகிறதா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.