இன்றைய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கின்றதோ, அதே அளவு நடிகைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. அதிலும் பெண்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் கொடுக்கின்றது. எடுத்துக்காட்டாக திரிஷா, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த திரைப்படங்களைக் கூறலாம்.
சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற காரணத்தினாலே பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணங்களை தள்ளிப் போட்டுக் வருகிறார்கள். அதிலும் 30, 40 வயதை தாண்டி பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அந்த வரிசையில் திரிஷா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளை கூறலாம். இதையெல்லாம் தாண்டி 40 வயதுக்கு மேற்பட்ட நடிகைகள் பலரும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் 90’ஸ்-களில் கலக்கிய சில நடிகைகள் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
நடிகை கௌசல்யா: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியவர் கௌசல்யா. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கு தற்போது 44 வயதாகின்றது. இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆன்மீகத்தில் இறங்கி இருப்பதால் திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை என்று அவர் கூறியிருக்கின்றார்.
நடிகை நக்மா: 90ஸ் கிட்ஸ் களின் கனவு கன்னியாக வலம் வந்த நக்மா தற்போது 53 வயதை தாண்டி இருக்கின்றார். அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் பல பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். இவர் பிரபல நடிகை ஜோதிகாவின் அக்கா ஆவார். இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியை இவர் காதலித்தார். ஏதோ ஒரு காரணத்தினால் பிரேக்கபாக அதைத்தொடர்ந்து நடிகர் சரத்குமார் உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கடைசிவரை திருமணம் ஆகாமலேயே சிங்கிளாக சுற்றி வருகிறார்.
நடிகை தபு: பாலிவுட் நடிகையாக தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தபு அஜய் தேவ்கனுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு 52 வயதாகின்றது. தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். பாலிவுட்டில் தற்போது வரை நடித்து வரும் இவர் சிங்கிளாகவே சுற்றி வருகிறார்.
நடிகை கிரண்: சியான் விக்ரமுடன் இணைந்து ஜெமினி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கிரண். தொடர்ந்து அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்த இவர் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணை கிடைக்காததால் தற்போது வரை திருமணம் ஆகாமல் சுற்றி வருகிறார். அதிலும் தற்போது தனக்கென ஒரு செயலியை திறந்து அதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.
நடிகை சோபனா: தளபதி திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் ஜோடியாக சேர்ந்து நடித்த இவரை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பல ஹிட் திரைப்படங்களில் நடித்த ஷோபனா, பரதநாட்டிய கலைஞரும் கூட. இவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகின்றது. தற்போது வரை திருமணம் வேண்டாம் என்று என்று கூறி பல மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
நடிகை அனுஷ்கா: தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வளம் வரும் அனுஷ்கா செட்டி 42 வயதில் கடந்த நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி, அருந்ததி போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் கிட் கொடுத்தது. நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்ததாக கிசு கிசுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை சிங்கிளாகவே சுற்றி வருகிறார்.