கவிதாலயா கிருஷ்ணன் இவரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 80 மற்றும் 90களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். கே பாலச்சந்திரன் இயக்கத்தின் வெளிவந்த பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, அவ்வை சண்முகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவரது கதாபாத்திரங்களில் பெரும்பாலும் மெட்ராஸ் பாஷை இருக்கும் .கவிதாலயா நிறுவனத்திற்கே பிரத்தியேக நடிகர்கள் இருப்பார்கள். அவர்களில் முக்கியமானவர் தான் கவிதாலயா கிருஷ்ணன். எம்டெக் பட்டதாரியான இவர் கவிதாலயா தயாரித்து வழங்கும் எல்லா திரைப்படங்களிலும் இருப்பார் .
அந்தப் படம் யார் இயக்கியதாக இருந்தாலும் சரி, யார் தயாரித்ததாக இருந்தாலும் சரி. கவிதாலயா தயாரிப்பில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இவர் இருப்பார். நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
அதில் பல விஷயங்களை பற்றி பேசியிருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: “ஒரு நாளைக்கு நான் 100 சிகரெட் குடிப்பேன். சிவக்குமார் என்னை பார்த்தாலே உன் சுவாசமே புகை தானடா என்று கூறுவார். கமல் சார், ரஜினி சார், சிவகுமார் என நாங்கல்லாம் ஒரு கேங் சிகரெட் பிடிப்பதற்கு, ஒரு சமயத்தில் ரஜினி சார் என்னை பார்த்து சிகரெட்டை விட்டுட்டீங்களா என்று ஆச்சரியமாக கேட்டார்.
அதற்கு நான் எனக்கு வீசிங் ப்ராப்ளம் இருப்பதால் அதை விட்டு விட்டேன் என்று கூறினேன். முதன் முதலாக நான் சிகரெட் பிடிக்க தொடங்கியது சிவாஜி, எம்ஜிஆரை பார்த்துதான். இன்று இருக்கும் ஜெனரேஷன் சிகரெட் பிடிப்பது ரஜினி, கமல் போன்றவர்களை பார்த்து தான். அவர்களைப் பார்த்து கெட்டுப் போனவர்கள் தான் இந்த ஜெனரேஷன். என் மனைவியிடம் நான் சத்தியம் பண்ணி கொடுத்தேன், இனி சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று, அவர் ஒரு டாக்டர் அதனால் என்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டார்” என்று பல விஷயங்களை பகிர்ந்திருந்தார் கவிதாலயா கிருஷ்ணன்.