ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை.. எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சோலோவாக சாதித்த நடிகர்கள்..!

By Nanthini on சித்திரை 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல புது முகங்கள் ஹீரோவாக அறிமுகம் ஆகி வருகிறார்கள். அவர்களில் பலர் ஏதோ ஒரு வகையில் சினிமா பின்னணியை கொண்டவர்களாக உள்ளனர். ஏற்கனவே சினிமாத்துறையில் ஸ்ட்ராங்கான அடித்தளத்தை கொண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் வாரிசுகளாக உள்ளனர். அதே நேரத்தில் சினிமாவின் மீது கொண்ட காதலால் எந்த பின்புலமும் இல்லாமல் போராடி வெற்றி பெற்றவர்களும் உண்டு. அப்படி சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து ஜெயித்தவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய  கலெக்ஷன் - Cinemapettai

   

எம்ஜிஆர்:

   

குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் நாடகங்களில் நடிக்க தொடங்கி அதன்பிறகு திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் தான் எம்ஜிஆர். திரைப்படத்துறையில் தன்னுடைய அயராத உழைப்பு காரணமாக முன்னணி நடிகராக இடம் பிடித்து சினிமா மட்டுமல்லாமல் அரசியலையும் ஒரு கலக்கு கலக்கினார்.

 

வில்லனாக மிரட்டிய சிவாஜியின் 4 படங்கள்.. இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை.!  - Cinemapettai

சிவாஜி:

சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து தானும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய ஏழு வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தவர் தான் சிவாஜி. அதன் பிறகு பல மேடை நாடகங்களில் வேடமிட்டு நடித்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல சினிமாவில் வளர்ந்து நடிகர் திலகம் என்ற புனைப்பெயரையும் பெற்றவர் தான் சிவாஜி.

சிகிச்சை முடிந்து ரஜினி வீடு திரும்பினார், தமிழ்நாடு செய்திகள் - தமிழ்  முரசு Tamilnadu News in Tamil, Tamil Murasu

ரஜினி:

இயக்குனர் கே பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் ரஜினிகாந்த். இயக்குனர் பாலச்சந்தர் சந்தித்தபோது ரஜினி பஸ் கண்டக்டராக இருந்தார். தனது வித்தியாசமான ஸ்டைலால் சினிமா துறையில் ரசிகர்களை கவர்ந்த அவர் இன்று சூப்பர் ஸ்டாராக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

Tamil movie songs that praises Captain Vijayakanth's legacy | Captain  Vijayakanth : கேப்டன் விஜயகாந்தின் அழியா புகழைப் பாடும் சினிமா பாடல்கள்!

விஜயகாந்த்:

 

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பில் ஆர்வம் காட்டாத விஜயகாந்த் எந்தவித சினிமா பின்புறமும் இல்லாமல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் தன்னந்தனியாக சாதித்துக் காட்டியவர். சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் தமிழக அரசியல் களத்தையும் ஒரு கலக்கு கலக்கினார்.

குதிரையில் அஜித்; வீரனைப் போன்ற தோற்றம்: அஜித்தின் இந்தப் படம்  கைவிடப்பட்டது ஏன்?

அஜித்:

என் வீடு என் கணவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் தான் அஜித். வசந்த் இயக்கிய ஆசை என்ற திரில்லர் படத்தின் மூலம் பிரபலமானார். அஜித் தனது சினிமாவில் சில குறிப்பிட்ட படங்களை வழங்கி தன்னை ஒரு மாசான நடிகராக வளர்த்துக் கொண்டார். அஜித் தன்னுடைய வயதை கேமராவுக்கு முன்னால் மறைக்க ஒருபோதும் தயங்கியது கிடையாது.

மீண்டும் காமெடியனாக நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை: நடிகர் சந்தானம்  | Santhanam press meet over DD Returns movie says will back comedian if  script ok - hindutamil.in

சந்தானம்:

சினிமாவில் ஏராளமான குறும்படங்களில் நடித்துள்ள சந்தானம் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தான் பிரபலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம் சிம்புவின் மன்மதன் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு | Tamil cinema actor vijay  sethupathi movie release

விஜய் சேதுபதி:

நடிகர் விஜய் சேதுபதி பல போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். ஹீரோவாக அறிமுகமாகும் முன்பே பல படங்களில் துணை நடிகராக வலம் வந்துள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக கிரெடிட் இல்லாத பல படங்களில் நடித்துள்ளார். துணை நடிகர் மற்றும் தொலைக்காட்சி சீரியல் என கிடைத்த நூல்களை எல்லாம் செய்து தன்னை வளர்த்துக் கொண்டவர் தான் விஜய் சேதுபதி. இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார்

சிவகார்த்திகேயனின் மிரட்டல் அவதாரம்.. வெளியானது மதராஸி செகண்ட் லுக் போஸ்டர்  - Cinemapettai

சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது கல்லூரி நாட்களில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் தனது தனித்துவமான ஸ்டைலின் மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் ஒரு தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் இறுதியாக அமரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்