பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களும் சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் டி ஆர் பி யில் போட்டி போட்டு வருகின்றன. அதன்படி இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்களை முதலிடத்தை தக்க வைத்துள்ளன.

சிங்க பெண்ணே:
சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.65 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

மூன்று முடிச்சு:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மக்களின் பேராதரவுடன் 9.24 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கயல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் 8.67 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.09 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.
மருமகள்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8.05 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 6.78 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 7.01 புள்ளிகள் உடன் எதிர்நீச்சல் 2 சீரியல் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக சின்ன மருமகள் சீரியல் 6.78 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.35 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் 6.21 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
