தவிர்க்க முடியாத இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் எப்படி சினிமாவில் நுழைந்தார் தெரியுமா?.. பலரும் அறியாத சுவாரசிய சம்பவம்..!

By Nanthini on சித்திரை 11, 2025

Spread the love

நெற்றி முழுவதும் திருநீறு பட்டை, குங்கும பொட்டு, கையில் வயலின் அப்படி என்றால் உடனே சிந்தையில் தோன்றும் ஒரே கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் தான். தற்போது இருக்கும் தூகே இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமா மட்டுமல்ல இசையால் கூட தவிர்க்க முடியாத கலைஞர் இந்த குன்னக்குடி வைத்தியநாதன். அனைத்து பாடல்களையும் தன்னுடைய கையில் இருக்கும் வயலின் மூலம் வார்த்தைகளால் உச்சரித்து பாடுவது போலவே இசையமைத்து காட்டும் திறமை கொண்ட ஜாம்பவான். 12 வயது முதலே இசை கச்சேரிகளில் பங்கேற்க தொடங்கினார்.

வயலின் பேசும்; அழும்; சிரிக்கும்; கேலி பண்ணும்; பாடும்! 'வயலின் ராஜா' குன்னக்குடி  வைத்தியநாதன் நினைவுநாள் | kunnakkudi vaithyanathan - hindutamil.in

   

பாடல்கள் மட்டுமல்லாமல் மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் ஓசைகளையும் தன்னுடைய வயலின் மூலம் வாசித்துக் காட்டும் திறமை கொண்டவர். வா ராஜா வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் திருமலை தென்குமரி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை பெற்றார். இவர் பல திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் சிறந்த கலைஞராக விளங்கிய இவ்வாறு சினிமாவில் அறிமுகமான சுவாரசிய சம்பவம் பலரும் அறியாதது தான். தமிழ் சினிமா உலகம் எத்தனையோ திறமையாளர்களை சந்தித்துள்ளது.

   

அப்பா போட்ட சபதத்திற்காக வயலின் கற்றுக்கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன்...  அப்படி என்ன நடந்தது தெரியுமா?

 

அப்படி சினிமாவில் சாதித்தவர்களில் யாருடையாவது வாழ்க்கை வரலாற்றை உன்னை பார்க்க கவனித்து பார்த்தால் அவர்கள் சினிமாவில் நுழைவதற்கு யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள். அப்படி இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் தமிழ் சினிமாவின் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியவர் வெங்கட்ரமணராவ் வென்ற வித்துவான் தான். குன்னக்குடி வைத்திய நாதனை பொருத்தவரை வயலின் வாசிப்பதில் அவருக்கு எந்த அளவிற்கு ஆர்வம் இருந்ததோ அந்த அளவிற்கு சினிமா மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அந்த காலகட்டத்தில் பல கலைஞர்களுக்கு வயலின் வாசிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் குன்னக்குடி வைத்தியநாதன்.

குன்னக்குடி வைத்தியநாதன் 10 | குன்னக்குடி வைத்தியநாதன் 10 -  hindutamil.in

என்னதான் பல வித்துவான்களுக்கு வாசித்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்வில் உயர வேண்டும் என்றால் அதற்கு சினிமா தான் சரியான வழி என்று குன்னக்குடி வைத்தியநாதனுக்கு எடுத்துக் கூறியவர் வெங்கட் ரமணா ராவ் தான். அவரின் அந்த அறிவுரையை ஏற்று உடனடியாக மாடர்ன் தியேட்டருக்கு புறப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன். அங்கு சென்று இசைப் பள்ளியில் சேர வேண்டும் என்று அவர் கூறியதும் அங்கிருந்த ஒருவர் இங்கு இருக்கும் குரு ஒருவர் நீங்கள் வயலின் வாசிப்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் சேர்த்துக் கொள்வார் என்று கூறினார்.

குன்னக்குடி வைத்தியநாதன் வாழ்க்கை வரலாறு – Kunnakudi Vaidyanathan Biography  in TamilItsTamil

அப்போது மாடர்ன் தியேட்டரில் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் ஜி ராமநாதன். அவர் முன்பே போய் குன்னக்குடி வைத்தியநாதன் நின்றதும் எங்கே வாசி பார்க்கலாம் என்று கூறினார். அப்போது ஜி ராமநாதனுக்கு பிடித்த ஒரு ராகத்தை எதிர்பாராத விதமாக குன்னக்குடி வைத்தியநாதன் தன்னையே அறியாமல் வாசித்து விட்டார். உடனே அது ராமநாதனுக்கு பிடித்து போக அன்று குன்னக்குடி வைத்தியநாதனுக்காக கதவுகள் மாடர்ன் தியேட்டரில் திறக்கப்பட்டது. அதன் பிறகு பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக வளர்ந்தார் என்றால் அதற்கு வித்திட்டது அன்று நடந்த அந்த சம்பவம் தான்.