“ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி…” படுத்து கொண்டே திலகம்…! கேமராவை பார்த்ததும் படுக்கையில் இருந்து சட்டென எழுந்த சோட்டே சர்க்கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில் படுத்துக்கொண்டே பூசாரி ஒருவரிடம் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. கேமரா பதிவு செய்யப்படுவதைக் கண்டதும் சட்டென படுக்கையிலிருந்து எழுந்த அவருக்கு, உதவியாளர்கள் பூமாலை அணிவித்து, கருப்புக் கண்ணாடியை மாட்டி விட்டு உபசரிக்கும் காட்சிகள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

வீடியோ காட்சி குறித்துப் பயனாளர்கள் பலரும் கிண்டலாகவும், வியப்பாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் எனக் கூறி வந்தாலும், வழக்கம்போல அனந்த் சிங்கின் இந்த காட்சி பீஹார் அரசியல் வட்டாரத்திலும் இணையத்திலும் தீயாகப் பரவி வருகிறது.