“ராங் சைடில் வந்துட்டு இவ்வளவு திமிரா…?” குழந்தையுடன் வந்த நபர்… காரை மறித்து தாக்குதல் நடத்த முயன்ற பைக் ஓட்டி…! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் தானே ‘தீன் ஹாத் நாகா’ பகுதியில், 14 மாதக் குழந்தையுடன் காரில் சென்ற குடும்பத்தின் முன் பைக் ஓட்டி ஒருவர் தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிவந்து வழியை மறைத்துள்ளார். அது யு-டர்ன் அடிப்பதற்கான வழி என்பதால் காரை ஓட்டிச் சென்ற நபர் வழி விடாததால், ஆத்திரமடைந்த பைக் ஓட்டி காரின் கதவை பலமாகத் தட்டி, காரில் இருந்த பெண்ணின் கணவரைத் தாக்க முயற்சித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DeKQ49-otVF/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

தான் தவறான பாதையில் வந்ததை ஒப்புக்கொள்ளாமல், “நான் தவறான பாதையில் வந்தா உனக்கென்ன?” என்றும், போலிசாரைக் கூப்பிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். காரில் இருந்த பெண் இச்சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுத் தானே காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.