“எல்லாரும் வாங்க வாங்க… நான் ஒரு பாகிஸ்தானி…” ஊரை கூட்டி பயமுறுத்திய நபர்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…. விசாரணையில் அம்பலமான உண்மை… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஹமீத் அன்சாரி’ என்றும், அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்குள் நடந்து வந்ததாகவும் கூறி அப்பகுதி மக்களை பயமுறுத்தியுள்ளார். பாதுகாப்பு மண்டலங்கள் நிறைந்த இடத்தில் இந்த நபர் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டு அச்சுறுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரான்ஜி பகுதி காவல் துறையினர் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பாகிஸ்தானியர் அல்ல என்றும், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த சிவம் பாதாக் என்றும் தெரியவந்தது. அவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி என்பதும், சிவம் பாதாக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அடிக்கடி வீட்டை விட்டு ஓடிவந்து இதுபோன்று நடந்து கொள்வதையும் காவல்துறை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிவத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.