Connect with us

ஆட்டுக் கிடாவால் சூப்பர் ஹிட் ஆன படம்.. வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலைபோட்டு கௌரவித்த சின்னப்ப தேவர்

aatukara alamelu

CINEMA

ஆட்டுக் கிடாவால் சூப்பர் ஹிட் ஆன படம்.. வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலைபோட்டு கௌரவித்த சின்னப்ப தேவர்

தமிழ் சினிமாவில் அதிகமாக விலங்குகளை வைத்துப் படம் எடுத்து அப்படங்களை சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை சின்னப்ப தேவருக்கு உண்டு. எப்படி ஏ.வி.எம்-க்கு ஓர் உலக உருண்டை ஸ்டைல், ஜெமினி ஸ்டூடியோவுக்கு இரண்டு சிறுவர்கள் போன்ற பிரபலமான லோலோக்களுக்கு மத்தியில் ஒரு யானை ஓடி வந்து பிளிறுவது போல் லோகோவை வடிவமைத்து  அப்போதே புதுமை காட்டியவர் சின்னப்ப தேவர்.

இவரின் படங்கள் என்றாலே முக்கியமாக விலங்குகள் நடிப்பில் அசத்தியிருக்கும். அப்படி தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம்தான் ஆட்டுக்கார அலமேலு. 1977-ல் தியாகராஜன் இயக்கத்தில் சிவக்குமார், ஸ்ரீ பிரியா  உள்ளிட்ட பலர் நடித்த இப்படமானது 25 வாரங்களுக்கு மேல் திரையில் ஓடி சாதனை படைத்தது.

Thevar films

#image_title

   

விஜயகாந்துக்கு வசனமே இல்லாமல் மௌனமாக நிற்க வைத்த இயக்குநர்.. ‘சின்னக்கவுண்டர்’ வெற்றி ரகசியம் சொன்ன RV.உதயக்குமார்..

 

சங்கர்-கணேஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக அன்று வானொலிகளிலும், மைக்செட் களிலும் ஒலித்து பிரபலமானது. இப்படத்தில் நடிகர்களுக்கு ஈடாக ஆட்டுக்கிடா ஒன்று நடித்திருக்கும். மேலும் படத்தின் வெற்றிக்கும் இந்த ஆட்டின் நடிப்பு பெரும் பங்கு வகித்தது. இவ்வாறு கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான்.

படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். மேலும் படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக்கும்.

‘ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் சின்னப்ப தேவர். மேலும் நல்ல நேரம் படத்தில் யானைகளை வைத்து சர்க்கஸ் விளையாட விட்டிருப்பார்.

nalla neram

#image_title

‘தண்ணீருக்காக பிச்சை எடுக்குறீங்க’.. இப்படி பேசிய நடிகைக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ரஜினியின் மகள்.. கத்தி என்ன புரியோஜனம்..

எம்.ஜி.ஆர்- தேவர் காம்பினேஷனில் உருவான முதல்படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் கம்புச்சண்டை காட்சியில், ’’நீங்களே எங்கூட நடிங்க, வேற ஆளு வேணாம்’’ என்று எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதை அடுத்து, இருவரும் தினமும் சிலம்பம் சுற்றினார்கள். படத்தின் டெக்னீஷியன்களே விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள்.

அந்த ஒரு சண்டைக்காட்சிக்காகவே அந்தப்படம் வசூலை அள்ளும் என்று தெரிந்திருந்தும், கூடுதலாக எம்.ஜி.ஆரை உயர்த்திக்காட்ட எண்ணிய தேவருக்கு உதயமான இன்னொரு யோசனைதான் ஜல்லிக்கட்டு. அதுவரை யாராலும் அடக்க முடியாத காளையைத் தானே தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, பிரம்மாண்டமான செட்டில் எம்.ஜி.ஆரை வைத்து ஜல்லிக்கட்டு காட்சியை படமாக்கினார் இந்த விலங்குகளின் காதலன்.

Continue Reading
To Top