‘தண்ணீருக்காக பிச்சை எடுக்குறீங்க’.. இப்படி பேசிய நடிகைக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ரஜினியின் மகள்.. கத்தி என்ன புரியோஜனம்..

By Sumathi

Updated on:

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் காவேரி நீர் பிரச்னை பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இதில் பெங்களூரைச் சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா என்ற கன்னட நடிகை, ஒருமுறை தமிழக மக்களை பற்றி இழிவாக கமெண்ட் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் தண்ணீருக்காக எங்ககிட்ட பிச்சை எடுக்கறீங்க, பெங்களூரை ஆக்கிமித்து கொச்சைப்படுத்திட்டீங்க, நீங்க பிச்சையாக கேட்பதால், தண்ணீர் தருகிறோம் என, அசிங்கப்படுத்தும் விதமான ஒரு கமெண்ட்டை பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழக மக்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

   

இந்த நடிகை வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். தமிழில் ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் தான்யா நடித்திருக்கிறார். எனினும் தமிழக மக்கள் குறித்து மிகவும் கடுமையான வார்த்தைகளால் அவர் விமர்சித்த நிலையில், ஒரு கட்டத்தில் இனிமேல் நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றும் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவர உள்ள லால் சலாம் படத்தில், இந்த தான்யா பாலகிருஷ்ணன்தான் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழக மக்களை இழிவுபடுத்தி, தண்ணீருக்காக பிச்சை எடுக்கறீங்க, எனக்கேட்ட நடிகை தான்யா நடித்த படத்தை, ரசிகர்கள் ஹிட் ஆக்க வேண்டும். அது அவர்கள் கடமை என கிண்டலாக ப்ளு சட்டை மாறன் கலாய்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது இப்போது வைலராகி வருகிறது. எத்தனையோ கதாநாயகிகள் இருக்கும்போது இவர்தான் கிடைத்தாரா, என்ற சர்ச்சையான கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

GEyDqCGaQAA4Zh9
author avatar
Sumathi