நடிகர் கமலஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவான படம் தான் தக் லைப். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், இந்த படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது.
படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. பாடகி தீ தான் இந்த பாடலை தமிழில் அந்த படத்தில் பாடியிருந்தார். ஆனால் அவர் பாடிய அந்த பாடலை விட சின்மயி பாடியது தான் சிறப்பாக பாடியிருப்பதாக ரசிகர்களும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் சின்மயி பாடிய முத்தமழை பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த பாடல் யூட்யூபில் டாப் 100 இல் உலகளவில் பத்தாம் இடத்திலும், இந்திய அளவில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
