பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு காலாவதி தேதி உண்டு. உணவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கெட்டுப் போகும் தன்மை கொண்டது. உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணம் அதிலிருக்கும் பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் வளர்வது தான். ஆனால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டே போகாத சில உணவு வகைகளும் உண்டு. அதற்கு காரணம் அத்தைக்கு உணவு பொருட்களில் இருக்கும் இயற்கையான பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை ஆகும்.
முறையாக சேமித்து வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பல வருடங்கள் வைத்து சாப்பிடக்கூடிய உணவுகளும் இருக்கிறது. இந்த நிலையில் தான் 25 வருடங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உணவு வகைகளை ஐக்கிய ஆய்வு அமீரகத்தைச் சேர்ந்த “ரெட் பிளானட்” என்ற நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. Freeze Drying என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உணவின் சுவை, ஊட்டச்சத்து ஆகியவை தக்கவைக்கப்படுகிறது. ஃப்ரிட்ஜ்ல வைக்காமலேயே இந்த உணவுகளை சாப்பிடலாம் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ அல் நோவாய்ஸ் கூறியுள்ளார்.
