ஹிமாமலாயப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் குறித்து நேபாளம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீனத் தரப்பிலுள்ள ‘புவியியல் பேரிடர் அணை’ தகர்ந்ததே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ற வாதத்தை சீனா “போலிச் செய்தி” என்று நிராகரித்துள்ளது. மேலும், பேரிடர் வருவதற்கு முன்பு முறையான எச்சரிக்கையை சீனா வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அந்நாடு மறுத்துள்ளது.
நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவு காரணமாகவே இந்த கோர விபத்து நேரிட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியிரோங்-ரசுவாகதி எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவுகள் இரு நாடுகளிலும் பெரும் உயிரிழப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து, மீட்புப் பணிகளிலும் ஒத்துழைப்பிலுமே கவனம் செலுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
https://twitter.com/MegaGeopolitics/status/2092592257677292020/video/1
இந்த இமயமலைப் பேரிடரைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லைப் பகுதி இயற்கை பேரழிவுகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் தீவிரமாக நடைபெற்று வரும் அதேவேளையில், எல்லை தாண்டிய பேரிடர் மேலாண்மையில் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
