ஐயோ… எங்க போறதுன்னு தெரியலையே சாமி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… 270 பேர் பரிதாப பலி… நேபாளத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 270 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக போட்கோஷி மற்றும் திரிசூலி நதிகளில் இந்த பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அவசர காலத்தில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன், சுமார் 300 இந்திய பிரஜைகளும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரிடரைக் சமாளிக்க இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுப் பொட்டலங்களுடன் 37.5 தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்ட இரண்டாவது விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது. மேலும், இந்தியத் தூதரகம் சார்பில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

   

இதற்கிடையில், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நேபாளத்திற்குச் சென்று சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை மீட்க அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்து அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக இருக்க பலரும், கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் பிரபலங்களும் தங்களது ஆதரவையும் கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.