“17 வயதில் அனுப்பிய ஒரு மெசேஜ்…” 22 வயதில் ரூ.1 கோடி சம்பாதித்து அசத்திய இளைஞரின் நம்பிக்கைக்கதை…! சமூக வலைதளங்களில் வைரலாகும் இளைஞரின் நெகிழ்ச்சிப் பதிவு…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

தனது 17வது வயதில் நுழைவுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த ஆதித்ய பன்சால் என்ற இளைஞர், பிரபல தொழில்முனைவோர் மற்றும் யூடியூபரான ராஜ் ஷமானிக்கு எக்ஸ் தளத்தில் அனுப்பிய ஒரு நள்ளிரவு குறுஞ்செய்தி அவரது வாழ்க்கையின் பாதையையே மாற்றியமைத்துள்ளது.

ராஜ் ஷமானியின் வீடியோ ஒன்றை அடிப்படையாக வைத்து ஆதித்யா தயாரித்த ட்விட்டர் பதிவுத் தொகுப்பைக் கண்டு வியந்த ராஜ், 17 வயதேயான ஆதித்யாவிற்கு முறையான பட்டப்படிப்போ அனுபவமோ இல்லாத நிலையிலும் நம்பிக்கை வைத்துத் தனது ட்விட்டர் பக்கத்திற்கான எழுத்தாளராகப் பணி வழங்கினார். சொந்த வங்கிக் கணக்கு இல்லாததால் ஆதித்யா தனது முதல் ஊதியத்தை அமேசான் கிஃப்ட் கார்டுகள் மூலம் பெற்றுள்ளார்.

   

ராஜ் ஷமானி அளித்த பாராட்டு மற்றும் சான்றிதழ்ஆதித்யாவிற்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு 45-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் சுயாதீனமாகப் பணியாற்றி, தனது 22வது வயதிற்குள் ₹1 கோடி வரை வருமானம் ஈட்டிச் சாதனை படைத்துள்ளார். “நான் எழுதியதிலேயே மிகச் சிறந்த செய்தி அந்த நள்ளிரவு செய்திதான்” என ஆதித்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.