ஓடையில் பாய்ந்த ஆட்டோ…! “குழந்தையை கவனிக்க தவறியதால் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

Spread the love

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் தேக்குதோடு பகுதியில், நேற்று மாலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆறு பேர் பயணித்த ஆட்டோ ஒன்று ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ், சாலையில் குறுக்கிட்ட பாம்பின் மீது மோதாமல் இருக்க திடீரெனத் திருப்பியதால், நிலைதடுமாறிய ஆட்டோ சுமார் நூறு அடி ஆழமுள்ள ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக அங்கிருந்த மக்கள் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், தும்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆதிலட்சுமி (7) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், விபத்து நடந்த நேரத்தில் யதுகிருஷ்ணா (4) என்ற மற்றொரு குழந்தையை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

மருத்துவமனைக்குச் சென்ற ஆதிலட்சுமியின் பெற்றோர், யதுகிருஷ்ணாவைக் காணவில்லை என்று கதறிய பிறகே, சுமார் இரண்டு மணி நேரம் தேடுதலுக்குப் பின் யதுகிருஷ்ணாவின் உடல் ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. விபத்து நடந்த ஆரம்பத்திலேயே குழந்தையைக் கவனித்திருந்தால் காப்பாற்ற வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

1 minute ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

5 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

6 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

10 minutes ago

கழுகுப்பார்வையா இது..? கண்ணிமைக்கும் நேரத்தில்.. தண்ணீருக்குள் இருந்து தூக்கப்பட்ட பிரம்மாண்ட மீன்…! மிரண்டுபோன நெட்டிசன்கள்…!

விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…

12 minutes ago

“பணத்தைக் கொடுத்தா தான் வேலை!” சஸ்பெண்ட் ஆனவரிடமே ₹1.30 லட்சம் லஞ்சம். கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!

சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…

15 minutes ago