அதிர்ச்சி..! பூஜையறையில் இருந்த செம்பருத்திப்பூ… கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த கொடூரம்.. 7 மாதக் குழந்தை துடிதுடித்து பலி..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவைச் சேர்ந்த சுதர்சன் – நவ்யா தம்பதியினரின் 7 மாத ஆண் குழந்தை சின்மயி, எதிர்பாராத விதமாக செம்பருத்திப் பூவின் காம்பை விழுங்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பூஜையறைக் கதவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த செம்பருத்திப் பூக்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, திடீரென ஒரு பூவின் காம்புப் பகுதியை எடுத்து வாயில் வைத்து விழுங்கியுள்ளது.

குழந்தையின் தொண்டையில் பூவின் காம்பு சிக்கியதை அறிந்த தாய் நவ்யா, உடனடியாக குழந்தையை மீட்க முயன்றார். ஆனால், மூச்சு விட முடியாமல் குழந்தை திணறியதால், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சுவாசக் குழாயில் செம்பருத்திப் பூவின் காம்பு சிக்கியிருப்பதை உறுதி செய்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

   

தங்கள் கண் முன்னேயே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இச்சம்பவம் குறித்து உன்சூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தியுள்ளது.