ஒரு நிமிடம் யோசித்திருந்தால் இந்த உயிர் போயிருக்காது… கிணற்றுக்குள் இருந்த அந்த 3 உடல்கள்… கணவன் – மனைவி சண்டையால் நேர்ந்த விபரீதம்…!!!

By Rajeshwari on சித்திரை 1, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள ஹொசூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதான மல்லம்மா என்ற பெண், தனது மூன்று வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு மகன்களையும் கிணற்றில் வீசி எறிந்த பின், தானும் அதே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக வீடு திரும்பாத அவர்களை அக்கம்பக்கத்தினர் தேடியபோது, அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் மூவரின் உடல்களும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

   

முதற்கட்ட விசாரணையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் குடும்பப் பிரச்சினையே இந்தத் துயர முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஒரு சிறு குடும்பத் தகராறு இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் உயிரையும், ஒரு பெண்ணின் வாழ்வையும் பறித்திருப்பது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.