“அதிகாரிகளுக்கே தெரியாது!”… திடீரென புழல் சிறைக்குள் நுழைந்த CM விஜய்… அதிர்ந்துபோன அதிகாரிகள்… சிறைத்துறைக்கு அதிரடி உத்தரவு…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து முன்னறிவிப்பின்றி பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய், அதன் தொடர்ச்சியாகச் சென்னை புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு ஒன்றை நடத்தினார். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் எம்.சி. ராஜா விடுதியைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆய்வில், புழல் சிறை வளாகம் மற்றும் அதனையொட்டியுள்ள காவல் நிலையத்தின் செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார். சட்டமன்றத்தில் சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து முடிந்த கையோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது மூத்த அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைக் கைதிகள், தண்டனை பெற்றவர்கள் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள மூன்று முக்கியப் பிரிவுகளையும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். சிறை வளாகத்தில் உள்ள சமையலறைக்குச் சென்று உணவின் தரத்தைப் பரிசோதித்த அவர், அங்குள்ள மருத்துவ வசதிகள் மற்றும் ஆடை பாதுகாப்பு அறைகளையும் ஆய்வு செய்தார். மேலும், சிறைவாசிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் சிறை நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்தும் நேரடியாகக் கலந்துரையாடிக் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

   

பெரும்பாலானோர் எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாகவே சிறைக்கு வந்துள்ளதாகவும், தற்செயலாக நடக்கும் தவறுகளுக்கும் திட்டமிட்டுச் செய்யப்படும் குற்றங்களுக்கும் வேறுபாடு உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கைதிகளின் திருந்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர்களின் கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தப் போதிய புத்தகங்களை வழங்கி மறுவாழ்விற்கு வழிவகை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழகத்திலுள்ள 125 சிறைகளில் பல்வேறு கல்வித்தகுதிகளைக் கொண்ட 23,608 கைதிகள் உள்ள நிலையில், சிறைக்காவலர்களுக்கு உடல் கேமரா, புதிய தையல் படி போன்ற திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வைத் தொடர்ந்து சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.