SIR-ஐ நாங்கள் எதிர்ப்பது ஏன்..? புதிய வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (SIR) தொடங்கி இருக்கிறது. இந்த பணிக்கான விண்ணப்பப் படிவங்கள், கடந்த 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் SIR திமுக எதிர்ப்பது ஏன்? என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் SIR படிவத்தில் மக்களை குழப்பம் விதமாக தேர்தல் ஆணையம் பல கேள்விகள் கேட்டு இருக்கிறது. வாக்காளர்கள் புதிய போட்டோவை ஒட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பதில் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு சரியான தெளிவு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.