பைக்கே ரூ.1 லட்சம் தான்… ஆனால் அபராதம் ரூ.20 லட்சமா..? ஆடிப்போன பைக் உரிமையாளர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட் ..!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பைக் ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்மோல் சிங்கல்  என்ற நபர் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த குற்றத்திற்காக போக்குவரத்து காவலர்கள், ரூ.20,74,000 அபராதம் விதித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அன்மோல் சிங்கல் , “பைக்கின் விலையே ரூ.1 லட்சம் தான், ஆனால் அபராதம் ரூ.20 லட்சமா?’ என அதிர்ச்சியடைந்து போலீசாரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், “அபராதம் ரூ.4000 தான், ரசீதில் பிழை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தனர்.