BREAKING: ஜனவரி 8-ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

By Soundarya on தை 6, 2026

Spread the love
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 8-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட்டு, மக்கள் நெரிசலின்றி ரேஷன் கடைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு வாயிலாக இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.