பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI), இந்திய எல்லைப் பகுதிகளில் உளவு பார்க்கச் சிறுவர்களைப் பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பட்டான்கோட்டில் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக 15 வயது சிறுவன் ஒருவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத் தளங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் நகர்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஐ.எஸ்.ஐ உளவு வேலைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
