நீங்க நெனைக்குற மாதிரி என்னால எடுக்க முடியாது.. தனுஷ் கூப்பிட்டு சொல்லியும் உதறித்தள்ளிய Most Wanted இயக்குனர்..

By Ranjith Kumar on மார்ச் 11, 2024

Spread the love

மஞ்சமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி தற்போது அவரை வளைத்து போட்ட தனுஷ். 1991 ஆம் ஆண்டு சந்தான பாரதி அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் குணா, இப்படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்று கொடைக்கானலில் உள்ள குணா குகையில் வைத்து வரும் பாடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் மஞ்சமெல் பாய்ஸ்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் திரையரங்குகள் கூட்டம் நிரம்பி வழியும் அளவிற்கு படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, ஆரம்ப காலகட்டத்தில் 3.3 கோடி என்ற மிதமான அளவில் வசூலை பெற்று, தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடி அளவை தாண்டி ஒட்டுமொத்த திரை உலகில் கிட்டத்தட்ட 100 கோடி அளவை தாண்டி மகத்தான சாதனையை படைத்துள்ளது, இதுவரையிலும் எந்த ஒரு மலையாள படமும் பண்ணாத ஒரு சாதனையை இப்படம் செய்துள்ளது.

   

தற்போது இப்படத்தின் வெற்றியைக் கண்டு உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கமல்ஹாசன் படக்குழுவினரையும், இயக்குனர் சிதம்பரத்தையும் அழைத்து பெருமிதம் கொண்டு பாராட்டி வந்தார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் திரையில் நல்ல வரவேற்பு கிடைத்ததை வைத்து பல தமிழில் மாபெரும் நடிகராக வளரும் தனுஷ் அவர்கள் இப்பட இயக்குனரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல், தனது அடுத்த படத்திற்கு நீங்கள் தான் இயக்குனர் என்று சிதம்பரத்தை கேட்டுக்கொண்டார்.

   

யாரடி நீ மோகினி என்ற கமர்சியல் போல் ஒரு படம் இயக்க வேண்டும் என்று சிதம்பரத்திடம் தனுஷ் கேட்டுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. அதற்கு சிதம்பரம் அவர்கள் எனக்கு தமிழ் படங்களில் உள்ள கமர்சியலான விஷயம் பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது, அதனால் நான் மலையாளத்தில் பிரபல நடிகர்களை வைத்து ஒரு சில படங்களை முடித்துவிட்டு, அதன் பின்னதாக நாம் இணைந்து படம் இயக்குவோம் என்று தனுஷ் அவர்களிடம் இயக்குனர் சிதம்பரம் கூறியுள்ளார்.