CINEMA
பிக்பாஸுக்கு பிறகு மீண்டும் ஓன்று கூடிய Bully gang.. ஓ இதான் விஷயமா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, நிக்சன், மாயா, பூர்ணிமா, ஜோவிகா, பாவா செல்லதுரை உள்ளிட்ட ஏராளமானோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு வேர்ல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அர்ச்சனா பிக் பாஸ் டைட்டிலை வென்றார்.
மாயா இறுதி சுற்று வரை வந்தும் டைட்டிலை பெறவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவணன், ஆகியோர் ஒன்றாகவே இருப்பார்கள். மக்கள் அவர்களை Bully gang என அழைக்க ஆரம்பித்தார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் ஜோவிகா, நிக்ஸன், சரவணன், பூர்ணிமா, மாயா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.
வனிதா வைத்த பார்ட்டிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிக்ஸன் நடராஜன் நாட்டியம் என்ற பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் ஜோதிகா பூர்ணிமா மாயா ஆகியோரும் பங்கேற்று பாடலை கேட்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர்.
மேலும் நிக்சன் எவன் என்ன சொன்னான் என்ன? உன் வேலையை பாரு என்பதுதான் பாடலின் மையக் கருத்து. இதில் இரண்டரை வருட உழைப்பு உள்ளது. பாடலை கேட்டுவிட்டு ஆதரவு தாருங்கள் என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.