Connect with us

CINEMA

காணாமல் போன பிரபலமான Anchor ஆடம்ஸ்.. தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா..?

2000 காலகட்டத்தில் மக்களை தொலைக்காட்சிக்கு முன்னால் கட்டிப்போட்டு வைத்தது சீரியல் மட்டுமாக இருந்தது. அதன் பின்னதாக வளர்ச்சி அடைந்து மக்கள் பொழுதுபோக்கை நோக்கி நகர் ஆரம்பித்தார்கள், அந்த சமயத்தில் தான் பல கலை நிகழ்ச்சிகள், பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பல முன்னணி டெலிவிஷன்கள் தொகுத்து வழங்க, அதில் பல கோடி மக்களின் ஆதரவை பெற்றார்கள். சீரியல்களை தாண்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பு கிடைத்ததை வைத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.

அதில் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் டிவி, கலைஞர் டிவி, சன் டிவி போன்ற முன்னணி சேனல்ஸ் பல வித விதமான, வித்தியாசமான முறையில் மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிக்கு வெற்றி வந்து குவியதற்கு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களே காரணமாகும்.! உதாரணமாக விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் டிடி, கோபிநாத், பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்சன் போன்றவர்கள். இவர்களின் சிறந்த தொகுப்பு முறையால் தான் அந்த நிகழ்ச்சியே மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.

   

அதே போல தான் சன் மியூசிகில் தொகுப்பாளராக இருந்து பல கோடி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்தான் ஆடம்ஸ். இவர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் மாபெரும் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கனிவான பேச்சும் தன்மையான செயலும் இவரின் வளர்ச்சிக்கு காரணமாகும். இவர் எந்த நிகழ்ச்சியிலும் காணாமல் இருந்த நிலையில், தற்போது இவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. அடம்ஸ் படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். கலையரசனை முக்கிய கதாபாத்திரத்தில் மையமாக வைத்து CAN என்ற தலைப்பில் இயக்க உள்ளாராம். அந்தப் படத்தில் மேலும் கோவை சரளா, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்ற மாபெரும் நடிகர்கள் நடிக்க உள்ளார்களாம்.

இப்படத்தை இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் போல் காதல் மற்றும் காமெடி டிராமா கலந்த கலவையில் எடுக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இவர் பாலச்சந்திரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகராக இருப்பதால், பாலச்சந்திரன் அவர்களின் கதை அமைப்பை போலவும், எஸ் ஜே சூர்யா, பாக்கியராஜ் போன்ற காமெடி கலந்த கமர்சியல் படத்தை போல் இயக்க உள்ளாராம். இதை அறிந்த இவரின் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top