இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக ஃபிடே மகளிர் உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் 19 வயது இளம்புயல் திவ்யா தேஷ் முக், அனுபவ வீராங்கனை கோனேரு ஹம்பியை கீர்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி கடைசி நொடி வரை ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிர வைத்தது. இந்தியாவின் இரு பெரும் வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் மோதியதால் கோப்பை இந்தியாவிற்கு தான் என்பது உறுதியாகிவிட்டது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் ஆட்டத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட திவ்யா தன் வசப்படுத்தினார்.
கச்சிதமாக விளையாடி ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை திவ்யா படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலமாக திவ்யா உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ளார். வெறும் 19 வயதில் உலக ஜூனியர் சாம்பியன் மற்றும் தற்போது உலகக்கோப்பை சாம்பியன் என இரட்டை மகுடம் சூடி இந்திய செஸ் போட்டியின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை திவ்யா நிரூபித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திவ்யாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…