புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி ஆவணத்தான்கோட்டை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் மதுபோதையில் இருந்த விக்னேஷை, அதே ஊரைச் சேர்ந்த உதயநிதி மற்றும் அவரது நண்பர்களான அருண்குமார், மணிகண்டன், ராமராஜன், வினோத் ஆகியோர் அழைத்துச் சென்றுள்ளனர். தனது கணவரைக் காணவில்லை என விக்னேஷின் மனைவி மணிமேகலை அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.
போலீசாரிடம் சரணடைந்த உதயநிதி அளித்த வாக்குமூலத்தில், தான் வெளிநாட்டில் இருந்தபோது தனது மனைவியுடன் விக்னேஷ் சண்டையிட்டதாகவும், ஊர் திரும்பிய பின் அதனைத் தட்டிக்கேட்டும் விக்னேஷ் கேட்காததால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்ததாகவும் கூறியுள்ளார். மதுபோதையில் இருந்த விக்னேஷை அழைத்துச் சென்று கட்டைகளால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொலையை மறைக்க, நண்பர்கள் ஐவரும் சேர்ந்து விக்னேஷின் உடலை ரகசியமான ஓரிடத்தில் புதைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதயநிதி மற்றும் அருண்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முயன்ற மணிகண்டனை திருச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். தலைமறைவாக உள்ள ராமராஜன் மற்றும் வினோத் ஆகியோரைத் தேடி வரும் போலீசார், புதைக்கப்பட்ட விக்னேஷின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். நண்பர்களே ஒருவரைக் கொன்று புதைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…