சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணின் மீது ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொடூர செயலில் ஈடுபட்டு தப்பியோடிய குற்றவாளியை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவி மோகனா (34). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மோகனா தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி பாபுலால் என்பவருடன் மோகனாவுக்கு கடந்த 6 ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய பழக்கம் இருந்துள்ளது. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாபுலாலுடனான தொடர்பை துண்டித்த மோகனா, அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வயிற்று வலி காரணமாக மோகனாவின் கணவர் மாணிக்கம் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கணவரைப் பார்க்க வந்த மோகனாவிடம் பாபுலால் பேச முயன்றபோது, அவர் பேச மறுத்துவிட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாபுலால், மதுபோதையில் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்று ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பின்னர், வீட்டின் முன் அமர்ந்திருந்த மோகனாவின் பின்புறமாகச் சென்று, திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மோகனாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, நந்தியம்பாக்கத்தில் பதுங்கியிருந்த பாபுலாலை கைது செய்தனர். கைதான பாபுலால் மீது ஏற்கனவே எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கிலும், ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…