ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த சீனுக்கான வீரர்களின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தற்பொழுது தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரான லியாம் லிவிங்ஸ்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழங்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு மாற்றாக, சிஎஸ்கே அணியில் உள்ள நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் ஆகிய இரு வீரர்களைக் கேட்டு ஹைதராபாத் அணி மெகா ஆஃபரை முன்வைத்துள்ளது.
ஆனால், இந்த ஆரம்பகட்ட டீலை சிஎஸ்கே நிர்வாகம் உடனடியாக நிராகரித்துவிட்டது. லிவிங்ஸ்டனுக்காக தங்களது அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களை விட்டுக் கொடுத்தால் அது அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று சிஎஸ்கே கருதுகிறது. மேலும், எதிர்வரும் ஏலத்தில் ஹேரி ப்ரூக் போன்ற தரமான வீரர்களைத் தாங்களே விலைக்கு வாங்க வாய்ப்புள்ளதால், இந்தத் வர்த்தகத்திற்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவைத் தக்கவைக்க மும்பை இந்தியன்ஸ் அணியுடனும், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களை மையமாகக் கொண்டும் சிஎஸ்கே மற்றும் பிற அணிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர் விவாதப் பொருளாகி உள்ளன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களை வர்த்தகத்தில் தாரைவார்க்கக் கூடாது என்பதில் சென்னை அணி நிர்வாகம் மிகவும் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
