குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த ஜிக்னேஷ் என்ற நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயிருந்த நிலையில், ஜிக்னேஷை அவரை மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து படுகொலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது. 2024 மே மாதத்தில் ஜிக்னேஷின் மதுபானத்தில் நச்சுப் பொருளான சயனைடை கலந்து கொடுத்து கொன்றுள்ளனர். பின்னர், அவரும் அவரது நண்பர் நிலேஷும் குத்தகைக்கு எடுத்திருந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் 12 அடி ஆழப் பள்ளம் தோண்டி உடலைப் புதைத்து விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர்.
கணவன் குறித்துக் குடும்பத்தினர் கேட்கும் போதெல்லாம், அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளதாகவும் அங்கு போன் பேச அனுமதி இல்லை என்றும் கூறி மனைவி நாடகமாடியுள்ளார். ஜிக்னேஷின் தம்பி ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டு முகவரியைக் கேட்டபோதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்தபோது மனைவி உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, காவல்துறையினர் கள்ளக்காதல் ஜோடியைக் கைது செய்து, தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தொழிற்சாலையில் தோண்டி உடலின் எச்சங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
