ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…! “விஜய் சாருக்கு என் நிலையை சொல்லணும்…” முதியோர் இல்லத்தில் இருந்து மோகன் சர்மாவின் உருக்கமான வேண்டுகோள்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து, முன்னணி நடிகராக வலம் வந்த மூத்த கலைஞர் மோகன் சர்மா, தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள இலவச முதியோர் இல்லத்தில் வறுமையில் வாடி வருகிறார். ஒரு காலத்தில் உச்சக்கட்ட புகழிலும் பணத்திலும் மிதந்த இவர், உடலநலக் குறைவு ஏற்பட்டபோது மாத்திரை வாங்கக்கூடக் கையில் காசில்லாத சூழலால் முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், தனது தற்போதைய அவல நிலையையும் குறைகளையும் நேரில் சந்தித்து முறையிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். தாம் தயாரித்த படங்களின் ஒளிபரப்பு உரிமையை யாராவது வாங்கினாலோ, அல்லது தமிழக அரசோ திரைத் துறையினரோ கைகொடுத்தாலோ தங்களின் எஞ்சிய வாழ்நாளை நிம்மதியாகக் கடத்த முடியும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். வறுமையில் வாடும் இந்த மூத்த தயாரிப்பாளரின் கண்ணீர்க் கோரிக்கை திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.