மக்களே… மெட்ரோ ரயிலில் ஏதாவது தொலைச்சிட்டீங்களா?.. இனி உங்க பொருளை கண்டுபிடிப்பது ரொம்ப ஈஸி… எப்படி தெரியுமா…?

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

சென்னை மெட்ரோ ரயிலை பொறுத்தவரையில் அதிகளவு பயணிகள் பயன்படுத்தும் இந்திய அளவிலான மெட்ரோ நிறுவனங்களில் ஒன்றாகும். மெட்ரோவில் பயணிக்கும் போது பல நேரங்களில் பொருள்களை தொலைத்து அதை மீட்பது சிரமமாக இருக்கும். இப்படியான சூழலில் பலரும் புகார் அளிக்காமல் இது மெட்ரோ அதிகாரிகள் இடையே தகவல் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர். இதனால் சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் முக்கியமான சேவை பலருக்கும் தெரியவில்லை.

அதாவது பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்லும் போது தவறவிட்ட பொருட்கள், தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது சென்ட்ரல் மெட்ரோவில் இயங்கும் இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம் மூலமாகவோ பெறுவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி பயணிகளை ஈர்க்கும் விதமாக இது செயல்பட்டு வருகிறது. மக்கள் நம்பிக்கையுடன் பயணிக்க வழிவகுக்கும் வகையில் இந்த நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னெடுப்பு காட்டி வருகிறது. பயணிகள் தங்களுடைய பொருள்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.

   

நிறுவனத்தால் பொருட்களின் பாதுகாப்புக்கு முழுமையான பொறுப்பு ஏற்க முடியாத நிலையிலும் தவறவிட்ட பொருட்களை மீட்டெடுத்து வழங்குவதில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Lost and Found அலுவலகம் கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், பணம்,ஆவணங்கள் மற்றும் பிற மதிப்புள்ள பொருட்களை உரியவர்களுக்கு திருப்பி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.