உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நூர்பால் என்பவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு லீலா (40) என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இதனிடையே லீலாவிற்கு தன்னுடைய மைத்துனரின் மகனான மருமகன் பிரம்மா ஸ்வரூப் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபரும் தனது அத்தை லீலாவை விட ஐந்து வயது சிறியவர். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இது பற்றி அறிந்த கணவர் லீலாவை அழைத்து விசாரித்துள்ளார். அதில் அந்த வாலிபருடன் உறவு வைத்திருப்பதை லீலா ஒப்புக்கொண்டார். அதேசமயம் இருவரும் மூன்று வருடங்களாகவே திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் லீலா தன்னுடைய மருமகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அந்த வாலிபருடன் காவல் நிலையம் வந்த லீலா, நான் வழக்கை தொடர விரும்பவில்லை, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் கையில் வைத்திருந்த மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு திருமணம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது
