ஸ்டாலினுக்கு செம ஷாக்… செந்தில் பாலாஜியை போல் கைதாகும் அமைச்சர் KN நேரு?… சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on தை 8, 2026

Spread the love

சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல் மற்றும் அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பாக இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டது. ஒப்பந்தங்கள் தொடர்பாக 1020 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதார ஆவணங்களுடன் கடிதம் அனுப்பி அமலாக்கத்துறை முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்தது.

இந்நிலையில் அமலாக துறையின் கடிதங்கள் அடிப்படையில் அமைச்சர் கே என் நேரு மீதான ஊழல் புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இது அமைச்சர் கே.என் நேருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி விசாரணையை எதிர்கொள்வேன் என்ற கே என் நேரு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் செந்தில் பாலாஜியை போல நேருவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது.