தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், சென்னையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தவெகவிற்கும் திமுக மேயருக்கும் இடையே கடும் அரசியல் மோதல் வெடித்துள்ளது.
சென்னையில் நிவாரணப் பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவும், திமுகவைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் எதிர்க்கட்சியினர் வீண் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்து ஆய்வு செய்த தகவல் தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், தான் வேறொரு பகுதியில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் அவர் வந்ததே தனக்குத் தெரியவந்ததாகவும் மேயர் பிரியா கூறினார். முறையான அழைப்பு விடுக்காமல் மேயர் வரவில்லை எனப் பொய் குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள், கள நிலவரம் அறியாமல் பேசுவதாகவும் அவர் சாடினார்.
பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துப் பேசுகையில், பள்ளிகளுக்கு திடீரென விடுமுறை அளிக்கப்பட்டதால் தயாரிக்கப்பட்ட உணவை மக்களுக்கு வழங்கச் சொன்னதுகூடத் தெரியாமல் எம்எல்ஏ புகார் கூறுவதாக பிரியா தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மழைக்காலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நேரத்தில் இரு தரப்பினரிடையே எழுந்துள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் சாலையோரம் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவன், அடையாளம் தெரியாத நபரால் திடீரெனக் காரில் கடத்தப்பட்டான்.…
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினருடன் சென்றிருந்த மூன்று வயது சிறுவனை, கற்றல் குறைபாடு கொண்ட ஒரு நபர் திடீரென…
பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம்…
தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டம், ஜட்செர்லா மண்டலத்துக்கு உட்பட்ட உத்தண்டாபூர் கிராமத்தில் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக நரசிம்ஹுலு என்ற விவசாயியின் 1.28 ஏக்கர்…