சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் நடனமாடும் போது ஏற்பட்ட தகராறில், இளம் பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான யான்சி என்ற இளம் பெண், சென்னையில் உள்ள தனது இன்ஸ்டாகிராம் நண்பரைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். பின்னர், தனது தோழியான 17 வயது சிறுமி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கோயம்பேட்டில் உள்ள ஒரு பாருக்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில், சுமந்த் சக்திவேல் என்பவரும் தனது நண்பர்களுடன் அந்த பாருக்கு வந்துள்ளார்.
மதுபான பாரில் இரு தரப்பினரும் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, பாரில் இருந்த பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்துள்ளது. ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர், சுமந்த் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் காரிலும், யான்சி மற்றும் அவரது தோழி இருசக்கர வாகனத்திலும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
அப்போது, கடுமையான மது போதையில் காரை ஓட்டிச் சென்ற சுமந்த் சக்திவேல், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது காரை வேகமாக மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பின்னால் அமர்ந்து பயணித்த 17 வயது சிறுமி படுகாயமடைந்து, தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய சுமந்த் சக்திவேலும் அவரது நண்பர்களும் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு கே11 காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி சுமந்த் சக்திவேல் உட்பட 3 பேரை புதுச்சேரி போலீசாரின் உதவியுடன் சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும், சென்னை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் பதுங்கியிருந்த பாலகுரு மற்றும் கிஷோர் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…