தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடானது மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தக்கால் நடும் பணியானது நடந்தது. அன்றைய தினமே மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.ஆனந்த் அனுமதி மனுவை அளித்தார். இதனை அடுத்து மாநாடு நடக்கும் இடத்தில பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் வரும் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் மாநாடு தேதியை மாற்றுமாறு தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாநாடு நடத்திக் கொள்வதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தைக் காரணம் காட்டி அந்த தேதிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் 22ஆம் தேதிக்கு ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…
காஷ்மீரில் தெரு நாய் ஒன்று கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சேப்பாக்கம் -…