BREAKING: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம்… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரைப் பணியிட மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நிர்வாகச் சீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சாய்குமார், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) தனிச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார்.